Published:Updated:

''வேற வேலை நிறைய இருக்கு; அதான் இந்த சீரியல்ல இருந்து விலகிட்டேன்!" - 'பூவே பூச்சூடவா' தினேஷ்

வே.கிருஷ்ணவேணி

'பூவே பூச்சூடவா' சீரியலில் இருந்து விலகியிருக்கிறார், அதில் ஹீரோவாக நடித்த தினேஷ்.

தினேஷ்
தினேஷ்

2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி இப்போது வரை நல்ல வரவேற்பைப் பெற்றுக்கொண்டிருக்கும் 'பூவே பூச்சூடவா' சீரியல், ஜி தமிழ் சீரியல்களின் ஹிட் லிஸ்டில் உள்ளது. இந்த சீரியலில் தினேஷ் - ரேஷ்மா ஜோடியாக நடித்து வந்தனர். இந்நிலையில், இந்த சீரியலிலிருந்து தீடீரென விலகியிருக்கிறார் தினேஷ். அவரிடம் பேசினோம்.

தினேஷ்
தினேஷ்

''இத்தனை வருடங்கள் நடிப்புத்துறையில் நான் சம்பாதித்திருப்பது, நல்ல உறவுகளான ரசிகர்களை. அவர்களின் ஆதரவும் அன்பும் இல்லாமல் இத்தனை வருடங்கள் நிச்சயமாகப் பயணித்திருக்கவே முடியாது. இத்தனை வருட அனுபவங்கள் அனைத்தும் சுவாரஸ்யமாகவே இருந்தது. தினமும் ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொண்டே இருந்தேன்.

எத்தனையோ குறை, நிறைகளை எடுத்துக் கூறி என் உறவுகளான ரசிகர்கள் என்னை இத்தனை தூரம் பயணிக்க வைத்திருக்கிறார்கள். அவர்களால்தான் என்னைப் பதிய வைக்கும் சிறு சிறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்திருக்கிறேன். அதில், என்னால் மறக்க முடியாத கதாபாத்திரம் 'பூவே பூச்சூடவா' சிவாதான்.

தினேஷ்
தினேஷ்

அத்தனை வெகுளியான நடிகனாக என்னை அதில் வெளிப்படுத்த முடிந்தது. பக்கத்து வீட்டுப் பையன் மாதிரி இருக்கிறான் என்கிற உணர்வை ரசிகர்கள் மத்தியில் அந்தக் கதாபாத்திரம் பதிய வைத்தது. இதுபோல இன்னும் பல கதாபாத்திரங்கள் வாயிலாக மக்களை மகிழ்வித்துக்கொண்டே இருப்பேன்.

'சிவாவை ஏன் மாற்றினீர்கள்', 'சிவாவின் இடத்தை சிவாதான் நிரப்ப முடியும்' எனப் பல ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அவர்களின் அன்புக்கு என் அன்பையே பரிசாகக் கொடுக்க நினைக்கிறேன். ஒரு நடிகனாக 'சிவா' கதாபாத்திரம் எனக்குக் கிடைத்த அற்புதமான வாய்ப்பு. அதற்குக் காரணம் அந்தக் கதாபாத்திரத்தின் வடிவமைப்பும் அதன் உணர்வுகளும்தான்.

தினேஷ்
தினேஷ்

இப்படி ஓர் ஈர்ப்போடு அந்தக் கதாபாத்திரத்தில் நடித்த என்னால், தொடர்ந்து அதில் பயணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை உங்களிடம் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்குக் காரணம் நான் புதிதாக எடுத்துக்கொண்ட வேலையும், அதில் எனக்கு ஏற்பட்ட வேலைச் சுமையுமே! 'சிவா'வாக இதுவரை உங்களை மகிழ்வித்த நான், வெகுவிரைவில் நீங்கள் பாராட்டும்படி ஒரு நல்ல கதாபாத்திரத்தில் வந்து மகிழ்விப்பேன். அதற்கு உங்கள் அன்பு, ஆதரவு நிச்சயம் தேவை. இந்த சீரியலில் நடிக்கும் வாய்ப்பை எனக்குக் கொடுத்த ஜி தமிழ் சேனலுக்கு என்னுடைய நன்றி'' என்றவர், தொடர்ந்தார்.

''என்னால் மறக்க முடியாத கதாபாத்திரம் 'பூவே பூச்சூடவா' சிவாதான். அத்தனை வெகுளியான நடிகனாக என்னை அதில் வெளிபடுத்த முடிந்தது. பக்கத்து வீட்டு பையன் மாதிரி இருக்கான் என்கிற உணர்வை ரசிகர்கள் மத்தியில் அந்த கதாபாத்திரம் பதிய வைத்தது.''
தினேஷ்

"ஒரு குடும்பத்துக்கு அழகு, குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒருவரையொருவர் புரிந்து செயல்படுவது. 'பூவே பூச்சூடவா' குடும்பமும் அப்படித்தான். சக நடிகர்களாக அல்லாமல், சொந்த பந்தங்கள் போன்ற உணர்வைக் கொடுத்த தம்பி மதன், திவாகர், ரேஷ்மா, கௌசல்யா பாட்டி, கிருத்திகா மற்றும் அதில் நடித்த அனைவருக்கும் நன்றி. மேலும், அதில் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றிகள்.

நானும் என் மனைவியும் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கிற ஒரு சீரியலில் ஜோடியாக நடிக்கிறோம். அந்த சீரியலின் கிரியேட்டிவ் ஹெட் நான்தான். இந்தமாத இறுதிக்குள் அந்த சீரியல் ஒளிபரப்பாகும். எப்போதும்போல ரசிகர்களாகிய உங்களின் பேராதரவைத் தருவீர்கள் என்கிற நம்பிக்கையோடு பயணிக்கிறோம்'' என்கிறார் தினேஷ்.

தினேஷ்
தினேஷ்

திடீரென ஒரு சீரியலின் ஹீரோவை மாற்றியிருப்பது, சீரியலில் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இனி தினேஷ் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில், கார்த்திக் வாசு என்பவர் நடிக்கிறார். இந்தத் தகவலை கார்த்தி வாசு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  

வே.கிருஷ்ணவேணி

வெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.