Published:Updated:

தனுஷின் 'பக்கிரி' படத்தின் டிரெய்லர் வெளியானது!

சனா

தனுஷ் நடித்த 'பக்கிரி' படம் சர்வதேச விருதுகளை பெற்ற படம்.

கென் ஸ்காட் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ஹாலிவுட் திரைப்படம் ' தி எக்ஸ்டிராடினரி ஜர்னி ஆப் தி பகிர்' . இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, லிபியா என பல நாடுகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

பக்கிரி
பக்கிரி

பல்வேறு சர்வதேச விருதுகளையும் இந்தப் படம் பெற்றுள்ளது. தமிழில் இப்படத்தை 'வாழ்க்கையைத் தேடி நானும் போனேன்' என்னும் பெயரில் வெளியாவதாக முதலில் இருந்தது. சில காரணங்களால் இது தள்ளிப் போனது. இந்நிலையில் தற்போது ஒய் நாட் எக்ஸ் நிறுவனம் 'பக்கிரி' என்ற பெயரில் படத்தை வெளியிட உள்ளது.

இந்த மாதம் ஜூன் 21 ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனுஷ் நடித்த முதல் ஹாலிவுட் திரைப்படம் இது என்பதால் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. தற்போது தமிழில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.