தீயா வேலை செய்யும் கணேசு! | இவன் வேறமாதிரி, விக்ரம் பிரபு, கணேஷ் வெங்கட்ராம்

வெளியிடப்பட்ட நேரம்: 16:19 (24/12/2012)

கடைசி தொடர்பு:16:19 (24/12/2012)

தீயா வேலை செய்யும் கணேசு!

தெலுங்கில் நாகார்ஜுன், அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த DAMURAKAM வரவேற்பை பெற்றது. அப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார் (அபியும் நானும், உன்னைப் போல் போன்ற படங்களில் நடித்த) கணேஷ் வெங்கட்ராம்

அப்படத்திற்கு கிடைத்து இருக்கும் வரவேற்பு தமிழில் அவரை பிஸியாக்கி இருக்கிறது.

சுந்தர்.சி இயக்கத்தில் சித்தார்த், ஹன்சிகா நடிக்க இருக்கும் ' தீயா வேலை செய்யணும் குமாரு ' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் கணேஷ் வெங்கட்ராம்.

'எங்கேயும் எப்போதும்' இயக்குனர் சரவணன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து வரும் ' இவன் வேறமாதிரி ' படத்தில் முக்கிய வேடத்திலும் அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

இவ்விரண்டு படங்கள் வெளிவந்தால், தமிழிலும் தானும் முன்னணி நாயகனாக வலம் வரலாம் என்று தீயாக வேலை செய்கிறாராம்  கணேஷ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்