விஷாலுடன் இணையும் பாரதிராஜா! | விஷால், பாண்டியநாடு, சுசீந்திரன், லட்சுமி மேனன், பாரதிராஜா

வெளியிடப்பட்ட நேரம்: 19:25 (30/04/2013)

கடைசி தொடர்பு:19:25 (30/04/2013)

விஷாலுடன் இணையும் பாரதிராஜா!

விஷால் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படத்தினை இயக்குனர் சுசீந்திரன் இயக்க இருக்கிறார். இப்படத்தில் விஷால், லட்சுமி மேனன் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள். படத்திற்கு 'பாண்டிய நாடு' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

இமான் இசையமைக்கும் இப்படத்தின் முழுப்படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஷாலுக்கு அப்பா வேடத்தில் நடிக்க பல்வேறு நடிகர்களை அணுகி வந்தார்கள்.

இந்நிலையில் விஷாலுக்கு அப்பாவாக நடிக்க பாரதிராஜா ஒப்பந்தமாகி இருக்கிறார். விரைவில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இது குறித்து விஷால் "எனக்கு அப்பாவாக பாரதிராஜா நடிப்பது பெருமையாக இருக்கிறது. அந்த வேடத்துக்கு அவர்தான் பொருத்தமாக இருப்பார்'' என்றார்.

இயக்குனர் சுசீந்திரன் கூறியதாவது ' 'படத்தில் விஷாலுக்கு இணையாக கனமானது அவருடைய அப்பா கதாபாத்திரம். அதற்கு பல நடிகர்களை தேடினோம். யாரும் பொருத்தமாக இல்லை. கடைசியாக, இயக்குனர் பாரதிராஜா நினைவுக்கு வந்தார்.

அவர் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. அவரிடம் போய் கேட்டபோது, முதலில் தயங்கினார். பிறகு சம்மதித்தார். ''என்னை நீ நடிக்க வைத்து விடுவாயா?'' என்று மட்டும் கேட்டார். நடிக்க வைத்து விடுவேன் என்று சொன்னேன். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை விரைவில் சென்னையிலும், மதுரையிலும் படமாக்க இருக்கிறோம்.'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்