தாமதத்தில் வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி

பொல்லாதவன், ஆடுகளம் போன்ற வெற்றிப் படங்களைத் தந்த தனுஷ் - வெற்றிமாறன் இணையும் அடுத்த படம் தாமதமாக ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் இந்தப் படத்துக்காக 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் தனுஷ்.

அதைத் தொடர்ந்து 'Raanjhanaa' படத்தின் இயக்குநர் ஆனந்த் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார்.

எனவே, இந்த இரண்டு படங்களையும் முடித்த பின்னர்தான் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி இணையும் எனத் தெரிகிறது. அநேகமாக இந்த வருட இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'கிளவுட் நைன் மூவிஸ்' தயாநிதி அழகிரி இந்த படத்தைத் தயாரிக்க உள்ளார்.


Do you like the story?

Please Appreciate the Author by clapping!