கல்யாணிக்குக் கல்யாணம்!

'அள்ளித் தந்த வானம்' படத்தில் 'சென்னைப் பட்டணம்' பாடலில் பிரபுதேவாவுடன் ஆடியவர் கல்யாணி. அதற்குப் பிறகு 'இன்பா' படத்தில் ஷாமின் காதலியாக நடித்தார்.

ராஜ் டி.வி.யில் 'பீச்கேர்ள்ஸ்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர், விஜய் டி.வியின் 'பிரிவோம் சந்திப்போம்' தொடரில் நடித்தார்.

இப்போது 'தாயுமானவன்' சீரியல் கல்யாணியை இன்னும் நன்றாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த சந்தோஷத்தில் திருமணத்திற்குத் தயாராகிவிட்டார் கல்யாணி.

மும்பை டாக்டர் ரோஹித்தைக் கரம்பிடிக்கப் போகிறார் .காதல் திருமணமா என்று கல்யாணியிடம் கேட்டால், இல்லை என டிரேட் மார்க் சிரிப்போடு பேசினார்.

''பெற்றோர்களால் பார்த்து, முடிவு செய்த நிச்சயிக்கப்பட்ட திருமணம்தான். ஆனால், எங்க ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி  நல்லா வொர்க் அவுட் ஆனதால, லவ் மேரேஜ் மாதிரியே ஒரு ஃபீல் இருக்கு.

என்னோட 'தாயுமானவன்' சீரியலை முதல் ஆளா உக்காந்து பாக்கறது எங்க மாமியார் வீட்லதான். அந்த அளவுக்கு எல்லாரும் எனக்கு சப்போர்ட்டா இருக்குறதால,  கல்யாணத்துக்கு அப்புறமும் நல்ல கேரக்டரா வந்தா கண்டிப்பா நடிப்பேன். '' என்கிறார் கல்யாணி.

வாழ்த்துகள் கல்யாணி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!