வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (16/12/2013)

கடைசி தொடர்பு:13:05 (16/12/2013)

எனக்கு அடிக்கடி அற்புதம் நடக்கிறது ! ரஜினி நெகிழ்ச்சி

என்டிடிவி வெள்ளிவிழாவைக் கொண்டாடும் வகையில், கருத்துக் கணிப்பின் படி 25 இந்தியர்களை மிகச் சிறந்த மனிதர்களாகத் தேர்ந்தெடுத்தது.

இதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்காக விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டு சிறந்த இந்தியர்களுக்கு விருது வழங்கினார்.

''மனித வாழ்க்கையில் எப்போதாவது அற்புதங்கள் நடக்கும். எனக்கு அடிக்கடி நடக்கிறது. அந்த அற்புதங்களில் இதுவும் ஒன்று. சாதாரண பஸ் கண்டக்டராக இந்த நான் இவ்வளவு பெரிய மனிதர்களுக்கு நடுவில் இருக்கிறேன் என்றால் அது அற்புதமான விஷயம்தான்.

எனக்கு தாயும் தந்தையுமாக இருந்த என் அண்ணன் சத்யநாராயணராவ் கெய்ட்வாட், என் குரு பாலச்சந்தர், என் தமிழ் மக்களுக்கு இந்த விருதை சர்ப்பிக்கிறேன். '' என்று ரஜினி பேசினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்