விறுவிறு வேகத்தில் கமல்! | Kamalahassan, Vishwaroopam-2, Uthamavillain, Dhirshyam, கமலஹாசன், விஸ்வரூபம்-2, உத்தமவில்லன், திர்ஷ்யம்

வெளியிடப்பட்ட நேரம்: 12:27 (28/03/2014)

கடைசி தொடர்பு:12:27 (28/03/2014)

விறுவிறு வேகத்தில் கமல்!

'விஸ்வரூபம்' படம் வெளியான போதே அதன் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார் கமலஹாசன். தவிர முதல் பாகம் எடுத்துக்கொண்டிருந்த போதே இரண்டாம் பாகத்திற்கு தேவையான பல காட்சிகளை எடுத்திருந்ததால் படப்பிடிப்பை சீக்கிரமாக முடித்துவிட்டார்.

இப்போது 'விஸ்வரூபம்-2' வின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகிறது. தற்போது 'உத்தமவில்லன்' படப்பிடிப்பை வேகமாக எடுத்துமுடிக்க பரபரப்பாக வேலைகள் நடந்து வருகிறது.

இதற்காக 3மாத கால்ஷீட்டை மொத்தமாக கொடுத்துவிட்டாராம் கமல்.இந்த வேகத்திற்குக் காரணம், 'உத்தமவில்லன்' படத்தை முடித்ததும் 'திர்ஷ்யம்' தமிழ் ரீமேக்கில் நடிக்க இருப்பதுதான்.

'உத்தமவில்லன்' படத்தைப்போலவே 'திர்ஷ்யம்' தமிழ் ரீமேக்கின் படப்பிடிப்பையும் விரைவாக முடிக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் கமல். இதற்கிடையில் 'விஸ்வரூபம்-2' படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகளையும் கவனமாக நடத்திவருகிறார்.

'விஸ்வரூபம்-2' சற்று தாமதமாக வெளிவந்தாலும், படத்தில் கிராஃபிக்ஸ் வேலைகள் ரசிகர்களை திருப்திபடுத்தும் விதத்தில் இருக்குமாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்