'யூ/ஏ' சான்றிதழ் பெற்ற 'நான் சிகப்பு மனிதன்!' | NSM, Vishal, Lakshmi menon, VFF, Dhananjayan, நான் சிகப்பு மனிதன், விஷால், லட்சுமி மேனன், விஷால் ஃபிலிம் ஃபேக்ட்ரி, தனஞ்செயன்

வெளியிடப்பட்ட நேரம்: 18:51 (03/04/2014)

கடைசி தொடர்பு:18:51 (03/04/2014)

'யூ/ஏ' சான்றிதழ் பெற்ற 'நான் சிகப்பு மனிதன்!'

திரு இயக்கத்தில் விஷால், லட்சுமி மேனன் நடித்திருக்கும் படம் 'நான் சிகப்பு மனிதன்'. இப்படம் சமீபத்தில் தணிக்கைக் குழுவிற்கு காண்பிக்கப்பட்டது.

படத்தில் சர்ச்சைக்குறிய வகையில் ஒரு முத்தக்காட்சி உள்ளது, அதை நீக்கினால் மட்டுமே 'யூ' சான்றிதழ் வழங்கப்படும் இல்லை எனில் 'யூ/ஏ' சான்றிதழையே வழங்குவோம் எனக் கூறியது தணிக்கைக் குழு.

படத்தில் இடம்பெறும் அந்த முத்தக்காட்சி கதைக்கு மிக முக்கியமானது என்பதால், மிகவும் குழம்பிப்போனது படக்குழு.

இந்நிலையில், தணிக்கைக்குழு அளித்த 'யூ/ஏ' சான்றிதழை படக்குழு ஏற்றுக்கொண்டது. படம் ஏப்ரல்11ம் தேதி வெளிவருகிறது என யூடிவி தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்