வெளியிடப்பட்ட நேரம்: 17:16 (19/06/2014)

கடைசி தொடர்பு:17:16 (19/06/2014)

'சதுரங்கவேட்டை'யை வாங்கிய திருப்பதி பிரதர்ஸ்!

ஹெச்.வினோத் இயக்கத்தில் நட்ராஜ், இஷாரா ஆகியோர் நடித்திருக்கும் படம் 'சதுரங்க வேட்டை'. இப்படத்தை இயக்குநரும் நடிகருமான மனோபாலா தனது பிக்சர் ஹவுஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.

கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லரும், பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வாங்கி தமிழகம் முழுவதும்  வெளியிடப் போகிறது. ஜூலை மாதம் இப்படம் வெளியாக உள்ளது.

இத்தகவலை இப்படத்தின் தயாரிப்பாளர் மனோபாலா தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும் இதை உறுதிப்படுத்தி உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க