வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (05/01/2015)

கடைசி தொடர்பு:15:05 (05/01/2015)

வருகிறது நடமாடும் 6டி திரையரங்கம்!

நடமாடும் திரையரங்கம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. டெல்லியின் முக்கிய பகுதிகளான கன்னாட் ப்ளேஸ் மற்றும் சரோஜினி நகர் ஆகிய இரண்டு இடங்களில் இந்த சேவை முதற்கட்டமாக தொடங்கப்பட உள்ளது

18 முதல் 20 இருக்கைகள் கொண்ட இந்த நடமாடும் திரையரங்கம் அமைந்துள்ள வாகனத்தில், கணினி கட்டுப்பாட்டு அமைப்பு ஒன்று பொருத்தப்பட்டிருக்கும்.

புதிய மின்னணு தொழில்நுட்பத்தைக் கொண்ட இந்த திரையரங்கில் ஆறு மாறுபட்ட கோணங்களில் இருக்கையை சரி செய்து கொள்ளும் வசதியும், தீ, பனி, தண்ணீர், புகை, காற்று போன்ற மிகவும் நுணுக்கமான ஒலிகளைக் கொண்ட 21 வகையான ஒலிக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது எனவும் டெல்லி மாநகராட்சி நிர்வாகத்தின் தலைவர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

இந்த நடமாடும் திரையரங்கம் மக்கள் கூடும் மார்கெட், பூங்காக்கள், போன்ற பொது இடங்களில் நிறுத்தப்பட்டு திரைப்படங்களை ஒளிபரப்பும் என்று அறிவித்துள்ளனர். ஒரு காலத்தில் இதே பாணியில் பயாஸ்கோப் படங்கள் காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன் அதிநவீன முன்னேற்றம் தான் இந்த நடமாடும் 6ட் திரையரங்கம் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்