விக்ரம் ஜோடியாக நயன்தாரா! | vikram, nayanthara, anand shankar, விக்ரம், நயன்தாரா, விக்ரம், ஆனந்த் ஷங்கர்

வெளியிடப்பட்ட நேரம்: 13:43 (18/02/2015)

கடைசி தொடர்பு:13:43 (18/02/2015)

விக்ரம் ஜோடியாக நயன்தாரா!

’ஐ’ படத்தை அடுத்து ’கோலிசோடா’  இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் ‘பத்து எண்றதுக்குள்ள’. விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படம் தற்போது முடியும் தருவாயை எட்டியுள்ளது. இந்த படத்தையடுத்து ‘அரிமா நம்பி’ படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். 

இந்நிலையில் இப்படத்தின் நாயகி நயன்தாரா  என அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் அடுத்து ஒரு படத்தில் விக்ரம் நடிப்பார் என தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. 

எனினும் சிம்புவின் ’அச்சம் என்பது மடமையடா’ படத்தின் முடிவுக்கு பிறகுதான் கௌதம் மேனனின் அடுத்தம் படம் குறித்த தகவல்கள் உறுதியாகும். ஏனெனில் அஜித் படத்தின் காரணமாக சிம்பு தனது படத்தை ஒத்திவைக்க ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்