மெய்சிலிர்த்துப்போன அமிதாப் பச்சன்!

இன்று அமிதாப் பச்சன் , மற்றும் தென்னிந்தியாவின் முக்கிய நடிகர்கள் இணைந்து ஒரு விளம்பரத்திற்காக படப்பிடிப்பு நடந்துள்ளது.

இதற்காக அமிதாப் பச்சன், பிரபு, விக்ரம் பிரபு, நாகார்ஜுன், சிவா ராஜ்குமார், மற்றும் மஞ்சு வாரியர் என அனைவரும் வேட்டி மற்றும் மஞ்சு வாரியர் பட்டு சேலை என புகைப்படம் இணையங்களில் சுற்றி வருகிறது. இந்நிலையில் அமிதாப் தன் ட்விட்டர் பக்கத்தில் தனது சந்தோஷ தருணங்களை பகிர்ந்துள்ளார். 

எனது சிறுவயது காலத்தில் எனது ஐகான்களாக விளங்கிய பெரிய பெரிய நடிகர்களின் மகன்களுடன் காலையிலேயே இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியான தருணம். என அவர் ட்வீட் செய்ய அதை ரீட்வீட் செய்த விக்ரம் பிரபு தனது வணக்கங்களையும், மகிழ்ச்சியையும் ஸ்மைலி சிம்பள்களாக ட்வீட் செய்துள்ளார். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!