விக்ரமின் மர்ம மனிதன்? | விக்ரம், ஐ, ஆனந்த் ஷங்கர், கௌதம் மேனன், மர்ம மனிதன், marma manidhan, vikram, anand shankar , gautham menon

வெளியிடப்பட்ட நேரம்: 16:17 (16/03/2015)

கடைசி தொடர்பு:16:17 (16/03/2015)

விக்ரமின் மர்ம மனிதன்?

’ஐ’ படத்தின் இரண்டு வருட இடைவெளியால் தற்போது அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் எண்ணத்தில் இருக்கிறார். ஒரே நேரத்தில் ‘அரிமா நம்பி’ இயக்குநர் ஆனந்த் ஷங்கர், மற்றும் கௌதம் மேனன் இயக்கத்தில் அடுத்த படம் என திட்டத்தில் இருக்கும் விக்ரம் 6 மாதத்திற்கு ஒரு படம் கொடுக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளார். 

ஆனந்த் ஷங்கரின் இயக்கத்தில் உருவாக உள்ள படத்திற்கு ‘மர்ம மனிதன் என பெயரிடப்பட்டுள்ளதாக படத்திற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க இருக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்கவிருக்கிறது. இதற்கிடையில் விக்ரம் நடித்து வரும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தின் படப்பிடிப்புகள் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இப்படம் விரைவில் வெளியாகிறது. இதனையடுத்து ஆனந்த் ஷங்கர் , கௌதம் மேனன் என இரு படங்கள் ஒரே நேரத்தில் உருவாக இருக்கிறது. கால்ஷீட் பிரச்னை வராமல் தடுக்க இரு படங்களுக்கும் பத்து நாட்கள் என நாட்களை பிரித்துள்ளாராம் விக்ரம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்