பார்க்கின்சன்ஸ் நோய்க்காக விழிப்புணர்வு நடைப்பயணம் சென்றார் ஜெயம் ரவி! | Jayam Ravi participated in parkinsons awarness!

வெளியிடப்பட்ட நேரம்: 15:13 (11/04/2015)

கடைசி தொடர்பு:15:13 (11/04/2015)

பார்க்கின்சன்ஸ் நோய்க்காக விழிப்புணர்வு நடைப்பயணம் சென்றார் ஜெயம் ரவி!

உலக பார்க்கின்சன்ஸ் தினத்தையொட்டி மெரீனா கடற்கரையில் இன்று காலை 6.30 மணிக்கு விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. ஜெயம்ரவி நடைப்பயணத்தைத் தொடங்கி வைத்து நடந்தார். கணேஷ் வெங்கட்ராமன் முன்னிலை வகித்து நடந்தார்.

இன்று உலகை அச்சுறுத்தி வரும் ஒரு நோய் பார்க்கின்சன்ஸ் நோய். இதனால் பாதிக்கப்பட்டவருக்கு முதலில் கை நடுக்கம் என்று தொடங்கி படிப்படியாக உடல் செயலிழப்பு வரை ஏற்படும். இந்தியாவில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர் 7.1மில்லியன் பேர் உள்ளனர். ஆனால் இது பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால்தான் இந்த நடைப்பயண ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நியூ ஹோப் ப்ரெய்ன் அண்ட் ஸ்பைன் சென்டர் மற்றும் ஆண்டனி பவுண்டேஷன் ஆகியவை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.ஜெயம்ரவி பேசும்போது "இந்த நடைப்பயணத்தை ஏற்பாடு செய்திருக்கும் டாக்டர் குழுவினரைப் பாராட்டுகிறேன்.அவர்களின் இம்முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறேன். " என்றார்.  

கணேஷ் வெங்கட்ராமன் பேசும்போது " நல்ல நோக்கத்தில் நடத்தப்படுகிற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் . இந்தியாவில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர் 7.1மில்லியன் பேர் என்கிற விவரம் அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இது பற்றிமேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். " என்றார். இந்நோயால் முதலில் பாதிக்கப்பட்ட நபரான பார்க்கின்சன் பெயரையே இந்நோய்க்கு வைத்துள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்