விஜய்யின் வசனத்திற்கு அடிமையான அனிருத்!

ஒய் திஸ் கொலவெறி என்ற ஒரு பாடலின் மூலம் ஓவர் நைட்டில் பிரபலமான இசையமைப்பாளர் அனிருத். தற்பொழுது இவர் ட்விட் செய்த வீடியோ வைரலாக பரவிவருகிறது.

தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்த அனிருத் அடுத்தடுத்து பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்தார். விஜய் நடித்த ’கத்தி’ படத்திற்கு இசையமைத்து ஹிட் அடித்ததால் அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் அஜித் நடிக்கும் படத்திற்கும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ஹிந்தி படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார். 



சமீபத்தில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ’கத்தி’ படத்தின் டையலாக்கான “ ஐ அம் வெயிட்டிங்” வசனத்திற்கு அனிருத் நடிப்பது போல வீடியோ செய்து இணையத்தில் வெளியிட்டார். தற்பொழுது வைரலாக பரவி வருகிறது. மேலும் ட்விட்டில் இந்த வசனத்திற்கு நான் அடிமை என்று கூறியுள்ளார் அனிருத்.

வீடியோ:

Do you like the story?

Please Appreciate the Author by clapping!