Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரஜினியின் புதியபடத்தில் இன்னொரு ஹீரோ?

கலைப்புலிதாணு தயாரிக்க பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதியபடத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் ஒன்றாம்தேதி மதியம் 3.10 க்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு மாதத்துக்கு முன்பே இதுபற்றிய செய்திகள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் வரத்தொடங்கிவிட்டன.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில்தான் தொடங்கவிருக்கிறது என்கிற செய்தி உட்பட அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்த எல்லாச் செய்திகளுமே முன்பே வந்துவிட்டவைதான். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துவிட்ட பிறகு, இன்னும் கொஞ்ச நாட்களுக்கு படத்தின் பெயர் என்ன? கதாநாயகி யார்? வேறு யாரெல்லாம் நடிக்கப்போகிறார்கள்? என்பது பற்றிய செய்திகள் வந்துகொண்டிருக்கும்.

திரையுலகில் யூகங்களாகப் பேசப்படுவவைகூட செய்திகளாகும். ரஜினி படம் என்பதால் இப்படி நடப்பதைத் தவிர்க்கமுடியாது. அறிவிப்புக்குப் பிறகு அப்படிப் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் இப்போதைய செய்தி என்ன தெரியுமா? ரஜினியின் இந்தப்புதியபடத்தில் இன்னொரு நாயகனும் இருக்கிறார் என்பதுதான். அவர் இயக்குநர் ரஞ்சித்தின் முதல்பட நாயகனான அட்டகத்தி தினேஷ்தான் என்று சொல்லப்படுகிறது. அவருக்கும் படம் முழுவதும் வருகிற மாதிரியான முக்கியமான வேடம் இருக்கிறதென்றும் சொல்லப்படுகிறது.

நாயகியாக நடிக்க நயன்தாரா உட்பட சிலரிடம் பேச்சுகள் நடந்துகொண்டிருப்பதாகவும், அவர் உட்பட படத்தில் நடிக்கும் நடிகர்கள் பட்டியல் முடிவானவுடன் தினேஷ் நடிக்கவிருக்கும் தகவலையும் வெளியில் சொல்வார்கள் என்றும் பேசிக்கொள்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்