சிவகார்த்திகேயன், அனிருத் ஆகியோரின் பெருந்தன்மை.

தயாரிப்புநிறுவனத்துக்கும் பாடல்களை வெளியிடும் நிறுவனத்துக்குமிடையிலான தகவல் தொடர்பு இடைவெளி காரணமாக சமுகவலைதளங்களில் மாப்பிள்ளசிங்கம் படத்தின் பாடல்கள் வெளியாகின. அவற்றை உடனே திரும்பப்பெற்றுக்கொண்டு அப்படத்தின் பாடல்களை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடவிருக்கிறார்கள்.

முன்கூட்டியே பாடல் வெளியானதில் படத்தைத் தயாரித்திருக்கும் எஸ்கேப்ஆர்டிஸ்ட் நிறுவனத்துக்கு அதிர்ச்சி என்றாலும் அதனால் ஒரு நன்மையும் விளைந்துவிட்டதாம். அந்நிறுவனத்தின் தயாரிப்பில் கேடிபில்லாகில்லடிரங்கா, வருத்தப்படாதவாலிபர்சங்கம், மான்கராத்தே ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

அதுமட்டுமின்றி தனுஷ் தயாரிப்பில் அவர் நடித்த காக்கிச்சட்டை படத்தை எஸ்கேப்ஆர்டிஸ்ட் நிறுவனம்தான் வெளியிட்டது. அதனால் அநநிறுவனத்தோடு தொடர்பில் இருக்கும் சிவகார்த்திகேயன், அவர்களுடைய படப்பாடல் முன்கூட்டியே வெளியானது தொடர்பாக வருத்தத்தைத் தெரிவித்தது மட்டுமின்றி படத்தின் விளம்பரத்துக்கு உதவும் வகையில் ஒரு பாடலைப் பாடிக்கொடுத்திருக்கிறாராம். அவரும் இசையமைப்பாளர் அனிருத்தும் இணைந்து அந்தப்பாடலைப் பாடியிருக்கிறார்களாம்.

இருவர் பாடுவது போன்ற அந்தப்பாடலில் ஒருவர் காதலைப் பற்றிப் பாடுவது போலவும் இன்னொருவர் அவருக்கு அறிவுரைகள் கூறுவதுபோலவும் பாடல் வரிகள் இடம்பெற்றிருக்கிறதாம். பாடலைக் கேட்ட சிவகார்த்திகேயன், காதல் பற்றி அனிருத் பாடட்டும் அதற்கு எதிர்ப்பாட்டு நான் பாடுகிறேன் என்று சொல்லி அந்தப்பாடலைப் பாடிக்கொடுத்தார்களாம். இதனால் முன்கூட்டியே பாடல் வெளியாகிவிட்டதே என்கிற வருத்தத்தில் இருந்த தயாரிப்புநிறுவனம் தீமையிலும் விளைந்த இந்த நன்மையால் மகிழ்ச்சியில் இருக்கிறதாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!