வெளியிடப்பட்ட நேரம்: 13:18 (19/06/2015)

கடைசி தொடர்பு:17:17 (19/06/2015)

மதுரைஆதினம் மடத்துக்குச் சரத்குமார் சென்றுவந்தது எதனால்?

ஜூலை பதினைந்தாம்தேதியன்று நடிகர்சங்கத்தேர்தல் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய தலைவர் சரத்குமார் அணிக்கு எதிராக நடிகர்நாசர் தலைமையில் ஓர் அணி வேகமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

இம்முறை தேர்தல்யுத்தம் சென்னை மட்டுமின்றி புதுக்கோட்டை, மதுரை, கரூர் என நாடகநடிகர்கள் இருக்கும் இடங்களுக்கும் பரவியிருக்கிறது. மதுரைக்குச் சென்ற ராதாரவி மற்றும் சரத்குமார் ஆகிய இருவரும் மதுரைஆதினம் மடத்துக்குச் சென்றதோடு அங்கிருந்தபடியே பத்திரிகையாளர்களையும் சந்தித்தனர். மதுரைஆதினம் மடத்துக்கும் நடிகர்சங்கத்துக்கும் என்ன சம்பந்தம்? சரத்குமாரும் ராதாரவியும் அங்குபோய்வந்தது ஏன்? என்கிற கேள்வி எல்லோருக்கும் எழுந்திருக்கிறது.

அவர்கள் இருவரும் அங்கு சென்றுவரக்காரணம், ஆளும்கட்சியின் ஆதரவு தங்களுக்கு இருக்கிறது என்று காட்டுவதற்குத்தான் என்று சொல்கிறார்கள். மதுரைஆதினம் அதிமுகவில் இருக்கிறார் என்பதால் அவருக்கு தமிழகமுதல்வரின் ஆசி இருக்கிறது அதனால், அவருடைய மடத்தில் இருந்து பேட்டிகொடுத்தால் சரத்குமார் தரப்புக்கு ஆளும்கட்சிஆதரவு இருக்கிறது என்று எல்லோரும் நினைத்துக்கொள்வார்கள் என்பதற்காகவே அவர்கள் மடத்துக்குச் சென்றுவந்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

முதல்வர் திரைப்படத்துறையினரைத் தள்ளியே வைத்திருக்கிறார், இப்படியெல்லாம் செய்து யாரையும் ஏமாற்றமுடியாது என்று எதிர்த்தரப்பினர் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். 

செய்தியை ஆடியோ வடிவில் கேட்க:

நீங்க எப்படி பீல் பண்றீங்க