Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாட்ஷா 2 படத்தில் அஜித் நடிக்கிறாரா?

ரஜினியின் மதிப்பைப் பன்மடங்கு உயர்த்திய பாட்ஷா படத்தின் இரண்டாம்பாகம் பற்றி செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அந்தப்படத்தில் ரஜினியே நடிக்கப்போகிறார் என்று முதலில் சொல்லப்பட்டது.

அவர் இப்போது ரஞ்சித் இயக்கத்தில் ஒருபடம், ஷங்கர் இயக்கத்தில் ஒருபடம் என்று ஒன்றுக்கு இரண்டு படங்களை ஒப்புக்கொண்டதால், அவரை விட்டுவிட்டு அஜித் நடிக்கப்போகிறார் என்கிற பேச்சு இப்போது வந்திருக்கிறது.

அஜித் இப்போது சிறுத்தைசிவா இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து அவர் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஒருபடத்தில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.இப்போது அதற்கு முன்பாகவே பாட்ஷா படத்தின் இரண்டாம்பாகத்தில் அவர் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

அஜீத் ஏற்கெனவே ரஜினியின் பில்லா படத்தின் மறுஉருவாக்கத்தில் நடித்து அது வெற்றியும் பெற்றதால், பாட்ஷா படத்தின் இரண்டாம்பாகத்தில் அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக அஜித் தரப்பில் விசாரித்தால், அப்படி எந்தப் பேச்சும் இதுவரை இல்லை என்று சொல்கிறார்கள்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!