விஜயசேதுபதி, பாபிசிம்ஹா மற்றும் அஞ்சலியுடன் எஸ்.ஜே.சூர்யா பிறந்த நாள் கொண்டாட்டம்! | S J Surya Birthday Function !

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (21/07/2015)

கடைசி தொடர்பு:15:57 (21/07/2015)

விஜயசேதுபதி, பாபிசிம்ஹா மற்றும் அஞ்சலியுடன் எஸ்.ஜே.சூர்யா பிறந்த நாள் கொண்டாட்டம்!

எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்த நாளை இறைவி படக்குழுவினர் நேற்று கொண்டாடினர். எஸ்.ஜே.சூர்யா தற்பொழுது நடித்துவரும் படத்தின் பெயர் இறைவி. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவருகிறார்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு தற்பொழுது புரசைவாக்கம் பகுதியில் நடந்துவருகிறது. படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு நட்சத்திரவிடுதியொன்றில் எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்த நாளை இறைவி படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர். விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, கார்த்திக் சுப்புராஜ், அஞ்சலி, கருணாகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பிட்சா மற்றும் ஜிகர்தண்டா படத்தின் வெற்றிக்கு காரணமான இரண்டு ஹீரோக்களையும் அவரின் மூன்றாவது படமான இறைவியில் நடித்துவருகிறார்கள். மற்ற இரண்டு படங்களை விடவும் சிறந்த படமாக வருவதற்கு கடினமாக உழைத்துவருகிறதாம் படக்குழு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்