Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினி - ரஞ்சித் படத்தின் பெயர் ‘காளி’?

’லிங்கா’ படத்தையடுத்து பல பெரிய இயக்குநர்கள் ரஜினியை இயக்கக் காத்திருக்கையில் யாரும் எதிர்பாரா விதமாக ’அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’ படங்களின் இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்க சம்மதித்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. தற்போது படத்தின் பணிகள் நடந்துவருகின்றன. 

படத்தின் கதை குறித்தும், ஹீரோயின் குறித்தும் தினம் ஒரு தகவல்கள் என வெளியான வண்ணம் உள்ளன. இந்நிலையில் அடுத்த கட்டமாக படத்தின் பெயர் என்ன என்பதே. ‘முள்ளும் மலரும்’ படத்தின் ரஜினியை இந்த படத்தில் காணலாம் என ரஞ்சித் கூறியிருக்கிறார்.

அந்த படத்தில் ரஜினியின் பெயர் காளி என்பது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு நெருங்கிய வட்டாரங்கள் படத்திற்கு தலைப்பும் ‘காளி’ என வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதே தலைப்பில் 1980ம் ஆண்டு ரஜினி நடிப்பில் ‘காளி’ என்ற த்ரில்லர் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்த பெயரில் ரஜினிக்கும் பெரிதாக விருப்பம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதே காளி என்ற பெயரில் ‘அனேகன்’ தனுஷ் நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.   

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
[X] Close