Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

படப்பிடிப்புகள் இரத்தால் கமல், ரஜினி, விஜய், அஜித் படங்களுக்குப் பாதிப்பு

  திரைப்படத்தொழிலாளர்கள் சம்மேளத்துடனான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றனவாம். 24 சங்கங்களுடனும் பேச்சுவார்த்தை முடிந்தபின்புதான் சம்பளஉயர்வு அமலுக்கு வருமாம். அதற்கு முன்பே சில படப்பிடிப்புகளில் தொழிலாளர்கள் உயர்த்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட சம்பளத்தைக் கேட்டதால் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

அதன்விளைவாக ஜூலை 27 முதல் படப்பிடிப்புகளை இரத்து செய்வதாக அறிவித்திருக்கிறது தயாரிப்பாளர்கள்சங்கம். இதனால் கமல், விஜய், அஜித் உட்பட முன்னணிநடிகர்களின் படப்பிடிப்புகள் உட்பட நிறையப்படப்பிடிப்புகளை இரத்துச் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாம். கமல் நடிக்கும் தூங்காவனம் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. அடுத்தமாதம் நான்காம்தேதி வரை படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டு அதன்படி வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் சென்னையில் நடந்துகொண்டிருக்கிறது. அஜித் படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடந்துகொண்டிருக்கிறது. இவற்றை நிறுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் மறுபடி அவற்றைத் தொடங்க நிறையச் சிரமங்களைத் தயாரிப்பாளர்கள் மேற்கொள்ளவேண்டியிருக்கும். படப்பிடிப்பு இரத்துச் செய்வதாக அறிவித்த தேதியிலிருந்து ஐந்துநாட்களில் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்தச் சிக்கல் தொடர்ந்தால் அந்தப்படப்பிடிப்புக்கும் சிக்கல் ஏற்படும். அதேபோல விக்ரம் படத்தின் படப்பிடிப்பும் அடுத்தமாதத் தொடக்கத்திலேயே தொடங்கவிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறதாம். அதுவும் பாதிக்கும் என்பதால் இந்தச்சிக்கலை விரைந்து முடிக்கும்படி எல்லோரும் வேண்டிக்கேட்டுக்கொண்டிருக்கிறார்களாம். எப்படியும் இன்னும் இரண்டுநாட்களுக்குள் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்து சிக்கல் தீர்க்கப்பட்டுவிடும் என்று சொல்கிறார்கள். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
[X] Close