Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அஜித் படத்துக்கு அதிகச்செலவு

சிறுத்தைசிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் கடந்த சில நாட்களாக நடந்துகொண்டிருக்கிறது. சுமார் ஒருமாதம் வரை நடக்கவிருக்கிறதாம். இதோடு படப்பிடிப்பு முழுமையாக வேண்டியது. ஆனால் முழுமையடையாத நிலை ஏற்பட்டிருக்கிறதாம்.

சென்னையில் முடிந்தபிறகு திரும்பவும் கொல்கத்தா போய் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தவேண்டியிருக்கிறதாம். ஏற்கெனவே அங்கு போனபோது திட்டமிட்டபடி மொத்தப்படப்பிடிப்பையும் முடிக்கமுடியாத அளவு கடும்மழை வந்துவிட்டதாம். பெரும்பாலும் வெளிப்புறப்படப்பிடிப்புக்காகவே அங்கு போனார்கள் என்பதால் மழை நேரத்தில் படப்பிடிப்பு நடத்தமுடியவில்லையாம்.

எனவே முன்பே திட்டமிட்டபடி சென்னையில் படப்பிடிப்பைத் தொடங்கி முடித்துவிட்டுக் கடைசியாக கொல்கத்தாவில் எடுத்துவிடலாம் என்று திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

எதிர்பாராத இந்த இயற்கைத் தடை காரணமாக திரும்பவும் படக்குழு அங்கு செல்லவேண்டியிருக்கிறது. இதனால் பலஇலட்சங்கள் அதிகமாகச் செலவழிக்கவேண்டியிருக்கிறதாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!