வெளியிடப்பட்ட நேரம்: 14:33 (20/08/2015)

கடைசி தொடர்பு:14:47 (20/08/2015)

ரோஜாவை விரட்டிச் சென்று கைது செய்த போலீஸ்!

நடிகை ரோஜாவை போலீஸார் காரில் விரட்டிச் சென்று கைது செய்துள்ளனர். செம்பருத்தி படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் ரோஜா தொடர்ந்து சூரியன், உழைப்பாளி, வீரா, உள்ளிட்ட பல படங்களில் நடித்து 90களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர்.

தெலுங்கிலும் ரோஜா சுமார் 50க்கும் மேலான படங்களில் நடித்து வருகிறார். மேலும் தமிழில் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும் செய்கிறார் .இப்போது ஆந்திர மாநிலம் நகரியில் எம்.எல்.ஏவாக இருக்கும் ரோஜா  சமீபத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நகராட்சி தலைவரின் குடும்பத்தை கைது செய்ததைக் கண்டித்து ஆர்பாட்டத்தில் இடுபட்டார்.

இதனால் நகரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற ரோஜவையும், அவரது அதரவாளர்களையும் போலிசார், காரில் விரட்டி சென்று கைது செய்துள்ளனர். இந்த நிகழ்வால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்