புலி இன்னொரு பாகுபலியா?

 சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் புலி படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. அப்போதிருந்து அந்தப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. அதற்குக் காரணம், விஜய் நடிக்கவந்து இருபத்திமூன்று ஆண்டுகள் ஆகின்றன. 

இவ்வளவு ஆண்டுகளில் அவர் இதுபோன்றதொரு படம் நடித்ததில்லை, இந்தப்படத்தில் குதிரையேற்றம் வாள்சண்டை என்று இதுவரை நடிக்காதமாதிரி வித்தியாசமாகச் செய்திருக்கிறார் விஜய். ஸ்ரீதேவி, மகாராணியாகவும் சுதீப் அரசர் போலவும் தோன்றுகிறார்கள். அதோடு பிரமாண்டஅரண்மனை, பெரியபெரிய மண்டபங்கள் ஆகியனவற்றைக் காட்டி காட்சிகளிலும் பிரமிப்பை ஏற்படுத்த முயன்றிருக்கிறார்கள். அண்மையில் இதேபோன்ற கதையம்சத்துடன் வந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது பாகுபலி.

 

அந்தப்படத்திலும் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள், அவையும் காட்சிக்கு அழகூட்டின. இந்தப்படத்திலும் நிறைய கிராபிக்ஸ்காட்சிகள் இருக்கின்றனவாம். அவை படத்துக்கு இன்னும் பலம் கூட்டும் என்கிறார்கள். பாகுபலியில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யாகிருஷ்ணன் உட்பட நிறைய நட்சத்திரங்கள் இருந்தார்கள் அதுபோலவே இந்தப்படத்திலும் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் உட்பட நிறைய நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். எனவே இந்தப்படம் இன்னொரு பாகுபலியாக இருக்கும் என்கிற பேச்சு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. எதிர்பார்ப்புகள் அதிகரிக்க அதிகரிக்க படக்குழுவினருக்குப் பொறுப்புகளும் அதிகரிக்கும்.   

 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!