வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (21/08/2015)

கடைசி தொடர்பு:19:34 (21/08/2015)

'காட் ஃபாதரை' கௌதம் மேனனும் விட்டு வைக்கவில்லை?

மரியோ புஸ்ஸோவின் புகழ் பெற்ற நாவலான ‘காட் ஃபாதர்’ நாவலின் கதைக் கருவை  உலகம் முழுவதும் பல மில்லியன் சினிமாக் காரர்கள் படமாக எடுத்துவிட்டனர். ஏன் நம் தமிழிலேயே நாயகன், தேவர் மகன், புதுப்பேட்டை, ஏன் கடைசியாக வந்த தலைவா வரை இந்த நாவலின் தாக்கம் தான் எனலாம். 

தற்போது கௌதம் மேனனும் இந்த நாவலின் சாரம்சத்தின் ஒரு பகுதியைத்தான் சிம்பு நடிக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் கதைக் கருவாக எடுத்துவருகிறார். இந்த நாவலில் இடம்பிடித்துள்ள காதல் பகுதிதான் கௌதம் மேனன் தன் படத்தில் கையாண்டிருக்கும் கதைக்கருவாம். 

சிம்பு நடிப்பில் பெரும்பான்மையான படப்பிடிப்புகள் நடந்து முடிந்துவிட்டது ஒரே நேரத்தில் தமிழ் , தெலுங்கு என உருவாகிவரும் இப்படத்தில் நாயகியாக மஞ்சிமா மோகன் நடித்துவருகிறார். தெலுங்கில் நாக சைதன்யா ஹீரோவாக நடிக்க ஹீரோயினாக தெலுங்கிலும் மஞ்சிமா மோகன் தான் நடிக்கிறார். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க