வெளியிடப்பட்ட நேரம்: 10:26 (22/08/2015)

கடைசி தொடர்பு:10:27 (22/08/2015)

இசைப் புயலுடன் கிரிக்கெட் ஜாம்பவான் சந்திப்பு !

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை இன்று அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். சென்னையில் எம்.ஆர்.எப். பவுண்டேசன் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் நேற்று சென்னை வருகை தந்தார்.

பின்னர் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை அவரது வீட்டுக்கு சென்று சச்சின் சந்தித்தார். அப்போது ஏ.ஆர். ரஹ்மானின் தாயாரும் உடன் இருந்தார். இந்த சந்திப்பின் போது ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கும் விதம் குறித்து, சச்சின் நேரில் பார்த்தார்.

சச்சினுக்கு சில ட்யூன்களை ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து காண்பித்தார். சந்திப்பு முடிந்ததும், தான் ஏ.ஆர். ரஹ்மானின் தீவிர ரசிகர் என்றும், மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்தாகவும் சச்சின் கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க