வெளியிடப்பட்ட நேரம்: 10:54 (22/08/2015)

கடைசி தொடர்பு:11:05 (22/08/2015)

பெரியவிலைக்கு விற்கப்பட்டிருக்கிறது ரஜினிமுருகன்?

   இயக்குநர்லிங்குசாமி தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ரஜினிமுருகன் படத்தை வேந்தர்மூவிஸ் நிறுவனம் வெளியிடவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இன்னும் அவர்கள் இதுபற்றி வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் இது சம்பந்தமாகப் பேச்சுகள் நடந்துகொண்டிருக்கின்றனவாம்.

இந்தப்படத்துக்கு வேந்தர்மூவிஸ் நிறுவனம் பெரியவிலை கொடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. திரையரங்குகளில் திரையிடும் உரிமைக்காக மட்டும் முப்பந்தைந்துகோடி கொடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். இதில் மினிமம்கியாரண்டி முறைக்காக ஒரு தொகை அதற்கு மேல் ஒரு தொகை என்று பேசப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

எப்படியிருந்தாலும் சிவகார்த்திகேயன் படத்துக்கு இது பெரியவிலை என்கிறார்கள். இந்தப்படத்துக்கான தொலைக்காட்சிஒளிபரப்பு உரிமை உள்ளிட்ட மற்ற வியாபாரங்களையும் கணக்கிட்டால் ஐம்புதுகோடியைத் தாண்டும் என்றும் சொல்லப்படுகிறது. இது அப்படியே உண்மை என்றால் சிவகார்த்திகேயன், விஜய், அஜீத் ஆகியோரை நெருங்கிக்கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க