கமலின் அடுத்தபடத்தை இயக்கப்போவது யார்?

 கமல் நடிக்கும் தூங்காவனம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது, இப்போது அதற்குப் பிறகான வேலைகளில் இருக்கிறார்கள். இந்தப்படம் நவம்பரில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அதற்கு முன்னால் கமலுடைய அடுத்தபடம் தொடங்கிவிடும் என்று சொல்கிறார்கள்.

உத்தமவில்லன் படவெளியீடு சமயத்தில் எழுந்த சிக்கலையொட்டி ஒருபடத்தில் நடித்துக்கொடுப்பதாக ஒப்புக்கொண்டிருந்தார் கமல். பாபாநாசம் படவெளியீடு சமயத்தில் அந்தப்படம் தொடர்பாக நடந்த பேச்சுவாத்தைகளின்படி தூங்காவனம் படத்தை முடித்துவிட்டு பேசியபடி ஒருபடம் செய்கிறேன் என்று கமல் உறுதிகூறியதாகச் சொல்லப்பட்டது.

இப்போது அந்தப்படத்தின் வேலைகள் தொடங்கியிருக்கின்றனவாம். அடுத்தபடத்தை நடிகர் மௌலி இயக்கப்போகிறார் என்று செய்திகள் வந்திருக்கின்றன. அவர் ஏற்கெனவே கமல் தயாரிப்பில் நளதமயந்தி படத்தையும் கமல் நடிப்பில்  பம்மல்கேசம்பந்தம் படத்தையும் இயக்கியிருக்கிறார்.

அடுத்தபடத்தையும் அவர் இயக்குகிறாரா? என்று கமல் தரப்பில் கேட்டால், அடுத்தபடத்தை இயக்கும் இயக்நுர் தொடர்பான பேச்சுகள் நடக்கின்றன, இயக்குநர் யாரென்று இன்னும் உறுதியாகவில்லை என்கிறார்கள். அதேசமயம் யார் இயக்குநர்? என்கிற பரிசீலனையில் மௌலி பெயரும் இருப்பதாகத் தெரிகிறது.     

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!