புதுமுக நடிகருடன் ஜோடி சேர்ந்தது எதனால்? வேதிகா விளக்கம்

 பிரபுதேவா தொடங்கியிருக்கும் தயாரிப்பு நிறுவனமான பிரபுதேவா ஸ்டூடியோஸ் முதல் கட்டமாக மூன்று படங்களைத் தாயாரிக்கவிருக்கிறது. இதில் ஒரு படத்தில் வேதிகா நயாகியாக நடிக்கவிருக்கிறார்.

முதல் படத்தை பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் இயக்க, பிரகாஷ்ராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ‘தின்க் பிக்’ நிறுவனத்தின் பங்குதாரரான நடிகை அமலாபால் விஜய்யுடன் இணைந்து பிரபுதேவா தயாரிக்கிறார்.

இரண்டாவது படத்தை ‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் இயக்குநர் லட்சுமணன் இயக்க ஜெயம்ரவியே ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு எடிட்ட்ராக ஆண்டனி தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்.

மூன்றாவது படத்தை, பிரபல நடிகரும், அரசியல் பிரமுகருமான ஐசரி வேலனின் பேரன் வருண் ஹீரோவாக நடிக்க இப்படத்திலேயே வேதிகா நாயகியாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தை புதுமுக இயக்குநர் விக்டர் ஜெயராஜ் இயக்கவிருக்கிறார்.

ப்ரித்விராஜ், சித்தார்த் நடிப்பில் வெளியான காவியத் தலைவன் படத்திற்குப் பிறகு எந்த படவாய்ப்புமின்றி இருந்த வேதிகா மீண்டும் தமிழில் புதுமுகநடிகருடன் படம் நடிக்கவிருக்கிறார். கன்னடத்தில் சிவலிங்கா என்ற படத்திலும், மலையாளத்தில் ப்ரித்விராஜூடன் ஒரு படமும் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைப் பற்றி வேதிகா பேசும்போது, “ பரதேசி, காவியத் தலைவன் உள்ளிட்ட படங்கள் என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட். இந்த இரு படங்களுமே என்னுடைய நடிப்பு திறமையை நிரூபிக்க உதவியது. அது போலவே இந்தப் படமும் வித்தியாசமான கதையம்சமுள்ள படம்” என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!