வெளியிடப்பட்ட நேரம்: 13:07 (24/08/2015)

கடைசி தொடர்பு:13:26 (24/08/2015)

இந்தவாரமும் வாலுவே முன்னணி, தொடரும் சிம்புவின் செல்வாக்கு

வாலு படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியானது. அந்தப்படத்தோடு வாசுவும்சரவணனும் ஒண்ணாபடிச்சவங்க படமும் வெளியானது. வெளியான வாரத்தின் வசூல்நிலவரப்படி அவ்விரு படங்களும் முன்னணியில் இருந்தன.

அடுத்த வெளியீட்டுத் தேதியான ஆகஸ்ட் 21 அன்று ஜிகினா, திகார் மற்றும் சிவாஜிகணேசனின் வீரபாண்டியகட்டபொம்மன் மறுவெளியீடு ஆகியன இருந்தன.

இந்த வார வெள்ளி, சனி,ஞாயிறு ஆகிய நாட்களில் வாலுவே வசூலில் முன்னணியில் இருந்ததாக வசூல் நிலவரங்கள் தெரிவிக்கின்றன. வாசுவும்சரவணனும்ஒண்ணாபடிச்சவங்க இரண்டாமிடத்தில் இருக்கிறது. 

வீரபாண்டியகட்டபொம்மன் படமும் வசூல் நிலவரப்பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது. ஆனால் இந்தவாரம் வெளியான புதுப்படங்கள் பட்டியலிலேயே இல்லை. அதுவும் இவ்வாரம் வெளியான படங்கள் முதல்நாளிலேயே முடிவுக்கு வந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்