வெளியிடப்பட்ட நேரம்: 17:44 (24/08/2015)

கடைசி தொடர்பு:14:10 (25/08/2015)

புலி ரிலீஸ் தள்ளிப்போனது

விஜய்யின் புலி செப்டம்பர் 17 வெளியாகும் என்று சொல்லப்பட்டுக்கொண்டிருந்தது. இப்போது அக்டோபர் 1 என்று சொல்லியிருக்கிறார்கள்.

செப்டம்பர் 17 இல் விநாயகர்சதுர்த்தி விடுமுறை.  வியாழக்கிழமையில் விநாயகர்சதுர்த்தி வருவதால், வியாழன்,வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய நான்குநாட்கள் நல்லவசூல் இருக்கும் என்று நினைத்துத்தான் அந்தத் தேதியில் படத்தை வெளியிட முடிவுசெய்திருந்தார்கள்.

ஆயினும் அந்தப்படத்தில் நிறைய கிராபிக்ஸ் வேலைகள் இருப்பதால் செப்டம்பர் 17 க்குள் படம் தயாராகாது என்பதால் இப்போது வெளியீட்டை அக்டோபர் 1 என்று சொல்லியிருக்கிறார்கள்.

இதுபற்றிப் படம் சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டால், செப்டம்பர் 17 ரிலீஸ் என்று சொல்லவேயில்லை என்கிறார்கள். அவர்கள் வெளியில் சொல்லவில்லையென்றாலும் அந்தத்தேதியில் படம் வெளியாகிறது என்று எழுதியபோது அதை அவர்கள் மறுக்கவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க