வெளியிடப்பட்ட நேரம்: 10:47 (25/08/2015)

கடைசி தொடர்பு:14:11 (25/08/2015)

சிம்புவால் கௌதம்மேனனுக்குக் கெட்ட பெயர்

சண்டைப்பயிற்சி இயக்குநர் பெப்ஸிவிஜயன் மகன் சபரிஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் அசுரகுலம் படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்ட வெளியீட்டுவிழா ஆகஸ்ட் 24 ஆம் தேதி நடந்தது. விழாவில் சிறப்புவிருந்தினர்களாக நடிகர் பிரபு, இயக்குநர் கௌதம்மேனன் ஆகியோர் கலந்துகொள்வதாக இருந்தது.

மாலை 4 மணிக்குத் தொடங்கவேண்டிய நிகழ்ச்சி, சொன்னநேரத்தில் தொடங்கவில்லை. அதற்குக் காரணமாக இயக்குநர் கௌதம்மேனன் வர கொஞ்சம் தாமதமாகிறது என்றார்கள். சிறிதுநேரம் கழித்து நிகழ்ச்சி மாலை ஆறுமணிக்குத் தொடங்கும் என்று சொல்லப்பட்டது. அதற்குக் காரணம், கௌதம் மும்பையிலிருந்து வரவேண்டும் அவர் விமானத்தை விட்டுவிட்டார்.

அடுத்த விமானம் பிடித்து வருவார் என்று சொல்லப்பட்டது. அதன்பினனர் ஆறு மணிக்குச நிகழ்ச்சி தொடங்கி நடந்தது. பிரபு, சந்தானம், பி.வாசு உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்போதும் கௌதம் வரவில்லை. ஏனென்றால், அவர் மும்பையில் சிம்பு படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறாராம். இரவுகளில் படப்பிடிப்பு நடக்கிறதாம்.

கௌதம் சென்னை வந்துவிட்டுத் திரும்பப்போவதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், ஒருநாள் படப்பிடிப்பு கெட்டுவிடும். ஒருநாள் நடக்காவிட்டாலும் மறுபடி சிம்பு கால்ஷீட் பெறுவது சிக்கலாகிவிடும் என்பதால் கௌதம் வரவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதையெல்லாம் முதலிலேயே சொல்லியிருந்தால் திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடந்திருக்கும். கௌதம் வராவிட்டாலும் நிகழ்ச்சி நல்லபடியாக நடந்துவிட்டது. கௌதம்மேனனுக்குக் கெட்டபெயர் ஏற்பட்டதுதான் மிச்சம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க