வெளியிடப்பட்ட நேரம்: 12:01 (25/08/2015)

கடைசி தொடர்பு:12:39 (25/08/2015)

புலி தள்ளிப்போனதற்கு காரணம் யட்சனா?ஆர்யா கோபம்!

விஜய்யின் புலி செப்டம்பர் 17ம்தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டுக்கொண்டிருந்தது. இப்போது அக்டோபர் 1 என்று சொல்லியிருக்கிறார்கள். செப்டம்பர் 17 இல் விநாயகர்சதுர்த்தி விடுமுறை. வியாழக்கிழமையில் விநாயகர்சதுர்த்தி வருவதால், வியாழன்,வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய நான்குநாட்கள் நல்லவசூல் இருக்கும் என்று நினைத்துத்தான் அந்தத் தேதியில் படத்தை வெளியிட முடிவுசெய்திருந்தார்கள்.

ஆயினும் அந்தப்படத்தில் நிறைய கிராபிக்ஸ் வேலைகள் இருப்பதால் செப்டம்பர் 17 க்குள் படம் தயாராகாது என்பதால் இப்போது வெளியீட்டை அக்டோபர் 1 என்று சொல்லியிருக்கிறார்கள். எனினும் அதே செப்டம்பர் 17ம் தேதி யட்சன் வெளியாவதால், புலி தள்ளிப்போனது யட்சனால் என நினைத்து #PuliBackedDueToYatchan என ட்ரெண்டை உருவாக்கிவிட்டனர். 

இந்நிலையில் இந்த ட்ரெண்ட் டேக்கை ஒருவர் ஆர்யாவிடம் சுட்டிக் காட்டி இதற்கு நீங்கள் தான் அறிவுரை கூற வேண்டும் என ட்விட்டரில் பதிவிட ஆர்யா இது தப்பான காரியம் ப்ரோ. புலி சிஜி வேலைகள் காரணமாக தள்ளிப்போடப்பட்டுள்ளது . அதனால டென்ஷன் வேண்டாம் என ரசிகர்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க