ரஜினி போட்டோஷுட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது!

ரஜினியின் அடுத்த படத்திற்கான வேலைகள் ஒருவழியாக தொடங்கிவிட்டது. ரஜினி - ரஞ்சித் கூட்டணியில் உருவாகவிருக்கும் படம் கபாலி.

முதல் கட்டமாக இப்படத்திற்கான  போட்டோ ஷூட் வேலைகள் தொடங்கிவிட்டது. இப்படத்தில் ரஜினி சால்ட் & பெப்பர் லுக்கில் தோன்றவிருக்கிறார். சென்னையைச் சேர்ந்த தாதா கதையாகவும், ரஜினி சென்னை தாதாவாகவும் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

அட்டகத்தி, மெட்ராஸ் படங்களைத் தொடர்ந்து ரஞ்சித்தின் மூன்றாவது படமே கபாலி. சந்தோஷ்நாராயணன் இசையில், தன்ஷிகா, கலையரசன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்.

கதாநாயகியாக ராதிகா ஆப்தே நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான முதல் பார்வை போஸ்டர் செப்டம்பர் 17ம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!