வெளியிடப்பட்ட நேரம்: 16:06 (25/08/2015)

கடைசி தொடர்பு:14:00 (26/08/2015)

புலி இயக்குநரைத் திட்டித்தீர்த்த விஜய்?

விஜய்யின் புலி படவெளியீடு தள்ளிப்போனதில் அவருடைய ரசிகர்கள் கடும்வருத்தத்தில் இருப்பார்கள் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. ஆனால் அவர்களை விட அதிக வருத்தத்தில் விஜய் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

விஜய்யைப் பொறுத்தவரை ஒரு விசயத்தை வெளியில் சொல்லிவிட்டால் அதன்படி சரியாகச் செய்துவிடவேண்டும் என்று நினைப்பவராம். அவருடைய படங்கள் வெளியீடு விசயத்திலும் அப்படித்தானாம். படத்தின் பாடல்கள் எப்போது? முன்னோட்டம் எப்போது? என்பதைச் சரியாகச் சொல்லவேண்டும் என்று நினைப்பாராம்.

ஆனால் புலி படத்தைப் பொறுத்தவரை எல்லாவற்றிற்கும் முதலில் ஒரு தேதி சொல்லவேண்டியது அதன்பின் அதை மாற்றவேண்டியது என்றே போய்க்கொண்டிருந்தது. படத்தின் வெளியீடும் அப்படியே ஆகிவிட்டது. முதலில் செப்டம்பர் 17 இல் படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமற்ற முறையில் சொல்லப்பட்டிருந்தது.

குறிப்பிட்டத் தேதிக்குள் படத்தின் வேலைகள் முடியாது என்று இயக்குநர் சொன்னதால் படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டிருக்கிறது. இதனால் கோபமடைந்த விஜய், இயக்குநரைத் திட்டித்தீர்த்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

ஒவ்வொரு முறையும் இப்படியேதான் நடக்கிறது. வேலைகள் எப்போதும் முடியும்என்று தெரிந்துதானே ரிலீஸ்தேதி பற்றிச் சொல்லவேண்டும் அதற்குமுன்பாகவே ஏன் சொல்லுகிறீர்கள் என்று கடிந்துகொண்டதோடு இப்போது சொல்லியிருக்கும் தேதியில் எந்த மாற்றமும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.     

நீங்க எப்படி பீல் பண்றீங்க