வெளியிடப்பட்ட நேரம்: 10:47 (27/08/2015)

கடைசி தொடர்பு:13:57 (27/08/2015)

சூர்யா தயாரித்த ஹைக்கூ படத்தை வெளியிடும் உரிமையை வாங்கியது எஸ்கேப் ஆர்டிஸ்ட்

 பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஹைக்கூ. சிறுவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் அந்தப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தப்படத்தை ஸ்டுடியோகிரின் நிறுவனம் வெளியிடுவதாகச் சொல்லப்பட்டிருந்தது. 

இப்போது இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடும் உரிமையை ஸ்டுடியோகிரின் நிறுவனத்திடமிருந்து எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் வாங்கிவிட்டாராம். 

படத்தில் சூர்யாவும் அமலாபாலும் சிறப்புத்தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். இந்தப்படத்தின் வேலைகள் முழுமையடைந்து வெளியீட்டை நெருங்கிக்கொண்டிருக்கிறது. விரைவில் பாடல்கள் வெளியீட்டுவிழா நடைபெறவிருக்கிறதாம்.

இந்தநேரத்தில் படத்துக்கு தமிழகஅரசின் வரிவிலக்கைப் பெற தலைப்பு ஒரு தடையாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக பெயரை மாற்றமுடிவுசெய்தார்கள். பல பெயர்கள் பரிசீலனையில் இருக்கிறதாம். விரைவில் புதியபெயர் அறிவிக்கப்படும் என்கிறார்கள்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க