வெளியிடப்பட்ட நேரம்: 11:18 (27/08/2015)

கடைசி தொடர்பு:18:55 (27/08/2015)

விஷாலுக்கு தயாரிப்பாளர்சங்கம் திடீர்ஆதரவு

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் பாயும்புலி செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப்படத்தை வேந்தர்மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

வேந்தர்மூவிஸ் நிறுவனம் ரஜினியின் லிங்கா படத்தை வெளியிட்டபோது செங்கல்பட்டு, வடஆற்காடு, தென்ஆற்காடு பகுதிகளில் வெளியிட்ட திரையரங்குஉரிமையாளர்களுக்கு பெருத்த நட்டம் ஏற்பட்டதாம். அதற்கு நட்டஈடு கொடுக்கவில்லை வேந்தர்மூவிஸ்.

இதனால் அந்நிறுவனம் தயாரித்திருக்கும் பாயும்புலி படத்தை திரையிடமாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள்சங்கம் அறிவித்தது. இதைக் கண்டித்து தயாரிப்பாளர்கள்சங்கம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

லிங்கா நட்டதுக்காக பாயும்புலி படத்துக்குத் தடைவிதிப்பது தொழில்தர்மம் அல்ல, இது கண்டனத்துக்குரிய செயல், அந்தத் தடையை உடனே நீக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறது. விஷால் படத்துக்கு தயாரிப்பாளர்கள்சங்கம் தாமாக முன்வந்து ஆதரவு கொடுத்திருப்பது வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்