சர்ச்சையைக் கிளப்புமா ருத்ரமாதேவி?

ஒரு சரித்திரம் சார்ந்த படம் வெளியாகிறது எனில் கண்டிப்பாக ஒரு பிரச்னை இருக்கிறது என்றே அர்த்தம். ருத்ரமாதேவி ராணி உண்மைக் கதைப்படி இறந்து விடுவார் அதுவும் போரில் வீர மரணம் என வரலாறு இருக்கிறது. 

இப்போது இந்த ருத்ரமாதேவி கதையில் அனுஷ்கா இறக்கிறாரா என்ற கேள்வி உருவாகியிருக்கிறது. காகதீய அரசியார் தான் இந்த ருத்ரமாதேவி. கிழக்குச் சாளுக்கியத்தில் நைதவோலுவின் இளவரசனான வீரபத்திரனை திருமணம் செய்து கொண்டார். இவரது ஆரம்பகால ஆட்சியில் சிற்றரசர்கள் பலர் தொல்லை தர அரசிக்கு உறுதுணையாக இருந்த அம்பதேவர் உதவியுடன் அத்தொல்லைகளை அடக்கினார்.

 

எல்லாவற்றிற்கும் மேல் ருத்ரமாதேவி இறந்தாரா அல்லது போரில் கொல்லப்பட்டாரா என்ற சந்தேகத்தில் இரு கதைகள் ஆந்திராவில் உலாவுகின்றன. ஒரு சாரார் அவர் முதுமை வயதில் இறந்ததாக கூறுகின்றனர். ஒரு சிலர் கயஸ்தா அரசருடன் போர் நடந்த வேளையில் அவர் கொல்லப்பட்டதாக கூறுகின்றனர். 

இந்நிலையில் ருத்ரமாதேவி படக்குழு எந்த கதையை அடிப்படையாகக் கொண்டு படத்தை எடுக்கிறார்கள் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. மேலும் ருத்ரமாதேவி காலத்திலேயே தெலுங்கானா பிரச்னை ஆரம்பித்ததாக சொல்லப்படுகிறது எனினும் 1953க்கு பிறகுதான் தெலுங்கானா பிரச்னை உள்ளது என இன்னொரு வரலாறு இருந்தாலும் அப்போது வேறு ஒரு பெயரில் இருந்தது எனக் கூறப்படுகிறது. 

எது எப்படியோ அரசியல் சரித்திரம் என கொஞ்சம் சிக்கல்கள் அதிகமாகவே உள்ள கதைக்களம் என்பதால் இதற்கெல்லாம் ருத்ரமாதேவி பதில் சொல்லுமா என்பதே இப்போதைய ஒரே கேள்வி. படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இப்போது செப்டம்பர் 17ம் தேதிக்கு மாற்றமாகியுள்ளது. இதற்கும் சில அரசியல் பிரச்னைகள் காரணமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!