வெளியிடப்பட்ட நேரம்: 10:58 (28/08/2015)

கடைசி தொடர்பு:11:17 (28/08/2015)

சம்மதிப்பாரா நயன்தாரா?

 முன்னணி நடிகையாக தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா தான். தன்க்கென தனி கொள்கைகள், கட்டுப்பாடுகள் என நயன்தாரா அவருக்கு பிடித்தால் மட்டுமே அவரை சந்திக்கக் கூட முடியும் என கிட்டத்தட்ட முன்னணி ஹீரோக்களுக்கு நிகராக இருந்து வருகிறார். 

இந்நிலையில் பெரிய நடிகர்கள், மற்றும் பெரிய ப்ட்ஜெட் படங்களில் மட்டுமே நடித்து வரும் நயன்தாராவிடம் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அறிமுக இயக்குநர் பிரசாந்த் இயக்கத்தில் உருவாக உள்ள ‘புரூஸ் லீ’ படத்தில் ஹீரோயினாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. 

முன்னணி நடிகையானாலும் ‘மாயா’,’ நீ எங்கே என் அன்பே’ மற்றும் உதயநிதியின் படங்கள் என நயன்தாரா சமீபகாலமாக அதிகம் ஒப்புக்கொள்ளும் படங்கள் முன்னணி நடிகர்கள் அல்லாத படங்களில் தான் நடித்து வருகிறார். இந்நிலையில் புரூஸ் லீ படத்திலும் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

எனினும் ஜி.வி.பிரகாஷின் வயது நயனின் வயதைக் காட்டிலும் குறைவு என்பதால் நடிக்க ஒப்புக்கொள்வாரா என்ற கேள்விஎழுந்துள்ளன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க