வெளியிடப்பட்ட நேரம்: 14:41 (28/08/2015)

கடைசி தொடர்பு:14:47 (28/08/2015)

விசாரணை படத்தின் கதை என்ன?

 வெற்றிமாறன் இயக்கத்தில் அட்டக்கத்தி தினேஷ், சமுத்திரக்கனி நடிப்பில் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் தயாரிப்பில் வெளியாக உள்ள படம் ‘விசாரணை’ படம் வெளியாகும் முன்பே ‘காக்கா முட்டை’ பாணியில் உலகின் சினிமா விழாக்களில் இடம்பெற்று பாராட்டுகளை பெற்று வருகிறது. 

இந்நிலையில் விசாரணை படத்தின் கதை இதுதான் என வெளியாகியுள்ளது. அட்டக்கத்தி தினேஷ் அடங்கிய ஒரு இளைஞர் குருப் லோக்கல் போலீஸிடம் சிக்கிக்கொள்ள, அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் மீது மிகப்பெரிய குற்றம் குறித்து வழக்கு தொடரப்படுகிறது. 

நீதிமன்றத் தீர்ப்புகளும் எதிராகவே அமைகிறது. இந்நிலையில் இதனையறிந்த மற்றொரு நல்ல குணம் படைத்த லோக்கல் போலீஸ் சமுத்திரகனி இவர்களுக்கு உதவி செய்ய முன்வருகிறார். எனினும் அரசியல் தலையீடுகளும், ஆதாரங்களும் என இவர்களுக்கு எதிராக உருவாக்கப்படுகிறது. எப்படி தினேஷ் டீம் இதிலிருந்து தப்பிக்கிறது என்பதே மீதிக் கதையாம். மிகவும் நுணுக்கமாக காவல் துறையின் மற்றுமொரு முகத்தை இந்தப் படம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. 

மக்களுக்கு தெரியப்படாத ஜெயில் வாழ்க்கையும் இதில் காண்பிக்கபடுவதாகவும் கூறப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க