வெளியிடப்பட்ட நேரம்: 12:24 (29/08/2015)

கடைசி தொடர்பு:12:39 (29/08/2015)

அஜித் மச்சினியைப் பரிந்துரைத்தார் தனுஷ்?

துரைசெந்தில் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் அவர் இரட்டைவேடங்களில் நடிக்கிறார். அண்ணன் தம்பியாக நடிப்பதாகச் சொல்கிறார்கள்.

அவற்றில் அண்ணன் தனுஷூக்கு ஜோடியாக லட்சுமிமேனனை ஒப்பந்தம் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. தம்பி வேடத்தில் தனுஷூக்கு ஜோடியாக அஜித் மனைவியின் தங்கை ஷாம்லி நடிக்கவிருப்பதாகச் சொல்கிறார்கள்.

நீண்டஇடைவெளிக்குப் பிறகு நடிக்கவரும் அவர் விக்ரம்பிரபு ஜோடியாக ஒருபடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தனுஷ் படத்திலும் அவர் நடிக்கிறார் என்று சொல்கிறார்கள். இந்த வேடத்துக்கு ஷாம்லி நடிக்கட்டும் என்று தனுஷே பரிந்துரைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இவ்விரண்டுபடங்களிலும் அவர் நடிப்பது உறுதியானால், தமிழில் இன்னும் ஒருபடம் கூட நடிக்காத ஷாம்லி, ஒரேநேரத்தில் இரண்டுபடங்களில் நடித்து தன்னுடைய பயணத்தைத் தொடங்குவார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க