பாகுபலி படத்தின் கிராபிக்ஸ் ரகசியங்கள் (வீடியோ இணைப்பு)

பாகுபலி படத்தை பார்த்து எப்படி தான் இப்படியெல்லாம் எடுக்கராங்க? என்று பலருக்கு மனதில் கேள்வி எழுந்திருக்க கூடும். அருவி மலை மேலே இருந்து கொட்டுது, இப்படியெல்லம் இடம் எங்கே இருக்கும்? குழந்தையை ஏந்திய ஒரு கை மட்டும் தண்ணீரில் தெரிகிறது, இப்படி எப்படி நடிக்க முடியும்? எல்லாம் கிராஃபிக்ஸ் னு தெரியுது ஆனா இதுல எவ்வளவு நிஜம் எவ்வளவு கம்ப்யூட்டரில் உருவாக்கியது தெரிஞ்சுக்க எல்லாருக்கும் ஆர்வம் இருக்கதான் செய்யும்.

 பல ஹாலிவுட் படங்கள் ஏன் பாலிவுட் படங்கள் கூட படம் வெளியானதும் வி. எஃப் .எக்ஸ் உருவான விதத்தை வீடியோவாக வெளியிடுவது வழக்கம். அதே வழக்கம் இப்போது பாகுபலி படத்திலும் பின்பற்றியுள்ளனர். மகூடா வி.எஃப்.எக்ஸ் என்ற நிறுவனம் தான் பாகுபலி படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளை உருவாக்கியுள்ளது. குழந்தையாக தெரிந்தது படப்பிடிப்பின் போது ஒரு தண்ணீர் பாட்டில் தான் என்பது அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும்.

மகிழ்மதி நகரம், அரண்மனை,சண்டை காட்சியில் வரும் மிருகங்கள், பாடல் காட்சியில் வரும் எழில் கொஞ்சும் மலையருவி. இவை அனைத்தும் ஏதொ ஒரு அறையில் ஆர்டிஸ்ட்கள் கம்ப்யூட்டரில் வரைந்தவையே. க்ரீன் மேட் ஒன்றை வைத்து கொண்டு எப்படிபயெல்லாம் நம்மள ஏமாத்திருக்காங்க ! சினிமாவே ஒரு கண்கட்டு வித்தை தான் போல ! 

வீடியோவைக் காண:  

Baahubali: VFX Breakdown from Makuta VFX on Vimeo.

-ஐ.மா கிருத்திகா-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!