விபத்தில் சிக்கிய ராய்லட்சுமி!

ராய்லட்சுமி, ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகிவரும் பேய்ப்படம் சவுகார் பேட்டை. சென்னையில் படப்பிடிப்பு நடந்துவருகிறது. இப்படத்தில் ராய்லட்சுமி பேயாக நடித்துவருகிறார்.

சமீபத்தில் ராய்லட்சுமி நடிப்பில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. பேயாக இருக்கும் ராய்லட்சுமி பறந்து பறந்து சண்டைபோடுவது போன்ற காட்சிகள்.  டூப் போடாமல் அவரே நடித்துள்ளார். பாதுகாப்பிற்காக இடுப்பில் கயிறு கட்டி நடித்திருக்கிறார். அப்போது ராய் லட்சுமி விபத்தில் சிக்கினார். அவரது கையில் லேசாக அடிபட்டது.

 அடிபட்ட கையை காயத்துடன் போட்டோ எடுத்து இணையத்தில் வெளியிட்டு தன் ரசிகர்களின் அனுதாபங்களைப் பெற்று வருகிறார். மேலும் கூறும் போது, “ சின்னதாக சிராய்ப்பு கையில் ஏற்பட்டது. அடிபடாமல் ஒரு சண்டைக்காட்சியில் நடிக்க முடியாது என்று நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.

அவரே தன்னுடைய முகப்புத்தகத்தில் விபத்தில் அடிபட்டுவிட்டேன் என்று கூறியதால் பதறிப்போன ரசிகர்கள் புகைப்படத்தில் இருக்கும் சிறு சிராய்ப்புக்கா இந்த அக்கப்போர் என்று கடிந்து கொண்டிருக்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!