வெளியிடப்பட்ட நேரம்: 12:49 (02/09/2015)

கடைசி தொடர்பு:11:03 (03/09/2015)

இருபது நிமிடங்கள் குறைக்கப்பட்டது ஆர்யா படம்

சிட்டிஆப்காட், ஆமென் போன்ற படங்களை இயக்கிய லிஜோஜோஸ்பெல்லிசேரி இயக்கத்தில் ஆர்யா, பிருத்விராஜ் ஆகியோர் நடித்திருந்த மலையாளப்படம் டபுள்பேரல். இந்தப்படத்தை பிருத்விராஜ், ஆர்யா மற்றும் சந்தோஷ்சிவன் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தார்கள்.

இப்படம் ஓணம் பண்டிகையையொட்டி ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளியானது. முதல்நாளிலிருந்தே அந்தப்படம் சரியாகப் போகவில்லையாம். இந்தப்படத்தின் இயக்குநரின் முந்தைய படங்கள் வரவேற்புப் பெற்றிருந்ததால் இந்தப்படத்துக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவற்றைப் பொய்யாக்கும் வகையில் இந்தப்படத்தின் முடிவு ஆகிவிட்டதாம்.

இதனால் படத்தின் நீளத்தை இருபதுநிமிடங்கள் குறைத்திருக்கிறார்கள். முதலில் 160 நிமிடங்கள் இருந்த படத்தை இப்போது 140 நிமிடங்களாகக் குறைத்திருக்கிறார்கள். தான் தயாரித்து நடித்த படத்தின் நிலை இப்படியாகிவிட்டதே என்கிற அதிர்ச்சியில் இருக்கிறாராம் ஆர்யா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க