Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உறுதியானது ருத்ரமாதேவி ரிலீஸ்!

குணசேகர் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் அனுஷ்கா, பிரபாஸ், ராணா, கேத்ரீன் தெரசா, நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் ருத்ரமாதேவி படம் அக்டோபர் 9ம் தேதி கண்டிப்பாக வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் 4ம் தேதி வெளிவருவதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நிமிஷத்தில் படத்தின் வெளியீடு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிப் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ருத்ரமாதேவி ராணியின் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன குறிப்பிடத்தக்கது. 

சுமார் 4 க்கும் மேலான ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு ருத்ரமாதேவி படத்தின் ரிலீஸ் தேதி இப்போது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அக்டோபர் 9 என்பது அக்டோபர் 1, 2 தேதிகளில் வெளியாகும் படங்களின் வாசூல் மற்றும் ரிசல்டுகள் ஓரளவு தெரிந்துவிடும் என்பதால் ருத்ரமாதேவியின் வெளியீடு தேதி சரியான தேதி என்றே சொல்லலாம்.  

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்