Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் - நமிதா அதிரடி !

விஜயகாந்துடன் எங்கள்அண்ணா படத்தில் தொடங்கி பல முன்னணி தமிழ் நடிகர்களுடன் நடித்து டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் நமிதா. கடைசியாக இளைஞன் படத்தில் நடித்தார்.

தொடர்ந்து உடல் எடை அதிகரித்ததால் எந்தப் படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. சுமார் 92 கிலோ வரைக்கும் உடல் எடை கூடிவிட்டதாக சொல்லப்பட்டது. கடந்த மூன்று மாதங்களில் உடல் எடையை 20 கிலோவரைக்கும் குறைத்து மீண்டும் பழைய ஸ்லிம் நமிதாவாக மாறிவிட்டார்.

இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். அப்போது அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டதற்கு, “ நிச்சயம் அரசியலுக்கு வருவேன். ஆனால் எந்த கட்சியென்றெல்லாம் முடிவெடுக்கவில்லை. ஆனால் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் என்று கூறினார்.

கடந்த காலத்தில் படவாய்ப்பில்லாமல் போனதால் சொந்த ஊரான சூரத்திற்கே சென்று விட்டதாக வதந்திகள் பரவியதே என்று கேட்டதற்கு, “ நமிதாவாக என்னை எல்லோருக்கு அறிமுகம் செய்த இடம் தமிழ்நாடுதான்.

தமிழ்நாட்டை விட்டு எங்கேயும் செல்லமாட்டேன். தமிழ் ரசிகர்களைத் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். என் உழைப்பு, பணி, சேவை எல்லாம் தமிழ் நாட்டிற்கு தான் என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!