வெளியிடப்பட்ட நேரம்: 10:43 (03/09/2015)

கடைசி தொடர்பு:10:59 (03/09/2015)

ரஜினி படப்பெயருக்குப் பொருத்தமானவரா ஜீவா?

தமிழுக்கு எண்ஒன்றை அழுத்தவும் படத்த இயக்கிய ராம்பிரகாஷ்ராயப்பா இயக்கும் அடுத்தபடத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. இந்தப்படத்துக்கு ரஜினி நடித்த போக்கிரி ராஜா என்கிற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று படக்குழு முடிவுசெய்துள்ளது.

அதனால் அப்படத்தைத் தயாரித்த ஏவிஎம் நிறுவனத்திடம் இந்தப்பெயர் வேண்டும் என்று கேட்டு அணுகினார்களாம். அவர்கள் ரஜினியிடமும் கேட்டு அவருடைய சம்மதத்தையும் பெற்றுக்கொண்டு தலைப்பைக் கொடுத்துவிட்டார்களாம். இதனால் படப்பிடிப்பைத் தொடங்கும்போதே உற்சாகமாகத் தொடங்கியிருக்கிறார்கள்.

படத்தின் கதைக்கு அந்தத் தலைப்பு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது? என்பது படம் வெளியான பிறகுதான் தெரியும், இப்போது, போக்கிரிராஜா என்கிற பெயருக்குப் பொருத்தமாக ஜீவா இருப்பாரா என்கிற கேள்வி ரஜினி ரசிகர்கள் உட்பட பலருக்கும் வந்திருக்கிறதாம். இதற்குப் படம்தான் பதில் சொல்லவேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க