பாயும்புலி நாளை வெளியாகுமா? பரபரப்பு தொடருகிறது

விஷால் நடித்த பாயும்புலி படத்துக்கு செங்கல்பட்டு திரையரங்க விநியோகஸ்தர்கள்சங்கம் தடை விதித்ததைத் தொடர்ந்து திரையுலகம் பரபரப்பாகிவிட்டது.

அந்தத்தடை காரணமாக, தயாரிப்பாளர்கள்சங்கம் நாளை முதல் புதியபடங்களைத் திரையிடுவதில்லை என்றும் 11 ஆம் தேதி முதல் எல்லாப்படங்களையும் திரையிடுவதில்லை என்றும் முடிவுசெய்து அறிக்கை வெளியிட்டுவிட்டார்கள்.

செப்டம்பர் 2 ஆம் தேதி மாலை தயாரிப்பாளர்கள்சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிக்கை வந்த சில மணிநேரங்களில் விஷால், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், திட்டமிட்டபடி செப்டம்பர் 4 ஆம் தேதி பாயும்புலி படம் வெளியாகும் என்று சொல்லியிருக்கிறார்.

ஏன் இப்படி? செங்கல்பட்டு திரையரங்குஉரிமையாளர்கள்தானே படத்துக்குத் தடை விதித்தார்கள், மற்ற மாவட்டங்களில் நாங்கள் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்து காத்திருக்கிறோம் எங்களை ஏமாற்றலாமா? என்று தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் கேட்கத் தொடங்கிவிட்டார்களாம்.

அவர்களுக்குப் பதில் சொல்லும் விதமாகவே விஷால் இப்படி அறிவித்ததாகச் சொல்லப்படுகிறது. தயாரிப்பாளர்கள்சங்கமும் இதையொட்டிய அறிவிப்பை வெளியிடும் என்றும் சொல்கிறார்கள். இதற்கிடையே செங்கல்பட்டு திரையரங்குஉரிமையாளர்கள்சங்கக்கூட்டம் இன்று நடக்கவிருக்கிறதாம். அதில் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்பது மதியம் தெரியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!